தமிழ்நாடு

ப.சிதம்பரத்திடம் மன்னிப்பு கேட்டாரா எடப்பாடி பழனிசாமி?

Published

on

ஆகஸ்டு 13-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ப.சிதம்பரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு, ப.சிதம்பரம் எத்தனை ஆண்டுக் காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்கு என்ன பயன் பூமிக்குத்தான் பாரம். அவருடைய பேச்சைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றார்.

ப.சிதம்பரம் பூமிக்கு பாரம் என எடப்பாடி பழனிசாமி கூறியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். பூமிக்கு பாரம் என்றால் அவர் வாழவே கூடாது என்பது தான் பொருள். இதுதான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

இதனையடுத்து தனது வார்த்தையின் வீரியத்தை புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, தனது வருத்தத்தை ப.சிதம்பரத்திடம் சொல்ல தனக்கு நெருக்கமான ஒருவர் மூலம் முயன்றதாக தகவல்கள் வருகின்றன. அந்த நபர் சிதம்பரத்துக்கு போன் போட்டு பேசி முதல்வரின் வருத்தத்தை கூறியதாகவும், நீங்கள் விரும்பினால் முதல்வரே உங்களுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு பதில் அளித்த சிதம்பரம், இல்லைங்க. அதை நான் எதுவும் பெரிசா எடுத்துக்கலை. அவர் என்கிட்ட பேச வேண்டிய அவசியமும் இல்லை என மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Trending

Exit mobile version