தமிழ்நாடு

மின் – ஆதார் எண்களை இணைக்க கால அவகாசம்.. எத்தனை நாட்கள் தெரியுமா?

Published

on

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31 அதாவது இன்று கடைசி தினம் என்ற நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கால அவகாசம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பு உள்ளவர்களும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் இதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இது குறித்து அறிவிப்பு வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 15 முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஜனவரி 31 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் கால அவகாசம் முடிவதால் உடனடியாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இதுவரை 2.4 கோடி பேர் மின் – ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்றும் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே மின்சார அலுவலகம் அல்லது ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்லைனில் எப்படி இணைக்கலாம் என்பதை தற்போது பார்ப்போம்.

1. முதலில் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்களை பதிவு செய்ய வேண்டும்.

2. மின், மொபைல் எண்களை பதிவு செய்தவுடன் வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா? என்று கேட்கப்படும். நீங்கள் வீட்டின் உரிமையாளர் என்றால் உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்

3. இதனையடுத்து ஆதார் எண் உடன் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண்ணுக்கு OTP வரும். அந்த ஓடிபியை குறிப்பிட்டால் உங்கள் ஆதார் மின்இணைப்புடன் இணைக்கப்பட்டு விடும்.

4. இதனையடுத்து உங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை https://www.tnebitd.gov.inbillstatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் சென்று சரிபார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version