தமிழ்நாடு

திமுகவுக்கு திராணி இருக்கா என சவால் விட்ட அண்ணாமலை… கைது செய்ய மாட்டேன் என பம்மும் துரைமுருகன்!

Published

on

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து அண்ணாமலை திமுகவுக்கு தன்னை கைது செய்ய திராணி இருக்கா என சவால் விடுத்தார். இந்நிலையில் அண்ணாமலையை கைது செய்ய மாட்டேன் என திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

#image_title

அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்! என சவால் விடுத்தார்.

இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என சவால் விட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், நான் கைது செய்ய மாட்டேன். அவர் என்னிடம் சவால் விடவில்லை என்றார்.

Trending

Exit mobile version