இந்தியா

ரெப்போ உயர்வு எதிரொலி.. தனிநபர், வாகன, வீட்டு கடன் வட்டி உயர்வு எவ்வளவு?

Published

on

இந்திய ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதும், வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தியதால் தற்போது 6.25% எனவே வட்டி விகிதம் உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரெப்போ வட்டி விகித உயர்வு காரணமாக பேர்சனல் லோன் வீடு, வாகன கடன் வட்டி உயரும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தனிநபர் கடன் என்று சொல்லப்படும் பெர்சனல் லோன்களுக்கு 10 முதல் 12 சதவீதம் வட்டி பெறப்பட்டு வரும் நிலையில் ரெப்போ விகித உயர்வு காரணமாக 10.5% முதல் 12.5 சதவீதம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் வீடுகளுக்கான கடன் வட்டி விகிதங்கள் தற்போது 7 முதல் 9 சதவீதம் வரை இருந்து வரும் நிலையில் இனி 7.5 சதவீதம் முதல் 9.5 சதவீதம் வரை உயரும் என்று கூறப்படுகிறது. மேலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான வட்டிவிகிதம் இதுவரை 8 முதல் 12% வரை இருந்து வரும் நிலையில் இனி அது 8.5 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வங்கிகள் தாங்கள் கொடுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை எப்போது உயர்த்தும் என்பதை வங்கி நிர்வாகமே முடிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகித உயர்வு காரணமாக தவணை தொகையை செலுத்தும் காலம் அதிகரிக்கும் அல்லது மாதத்தவணை தொகை அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரெப்போ உயர்வு காரணமாக பிக்சட் டெபாசிட் முதலீட்டிற்கான வட்டி விகிதமும் 0.5% உயரும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version