தமிழ்நாடு
அண்ணாமலை ஐபிஎஸ் எப்படி ஆனார் என சந்தேகம் வருகிறது: திமுக பதிலடி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு திமுகவின் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலை இனி நீதிமனறங்களுக்கு செல்ல நேரிடும் என பதிலடி கொடுத்துள்ளார்.

#image_title
அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அண்ணாமலை ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட வெளியிடவில்லை. அண்ணாமலையின் பேட்டி பட்டிமன்ற பேச்சு போல சிரிப்பை தான் வரவழைக்கிறது. அவரை எப்படி இவ்வளவு நாள் போலீஸ் துறையில் வைத்திருந்தார்கள் என வியப்பாக உள்ளது.
அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். யார் யார் பெயரில் அவதூறு பரப்பினாரோ அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். அண்ணாமலை தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு இனி செல்ல நேரிடும். திமுக சொத்து பட்டியலுக்கான ஆதாரங்களை 15 நாளில் அண்ணாமலை வெளியிட வேண்டும்.
திமுக எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. ரஃபேல் வாட்ச் பில் என ஏதோ ஒரு பேப்பரை காட்டி அண்ணாமலை ஏமாற்றியுள்ளார். முதல்வரை களங்கம்படுத்தும் அண்ணாமலையின் என்னம் நிறைவேறாது. அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை. அண்ணாமலையின் அறியாமையை பார்த்தால் ஐபிஎஸ் எப்படி ஆனார் என சந்தேகம் வருகிறது. அண்ணாமலை பட்டியலில் வெளியிட்ட அனைவரும் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வார்கள் என்றார்.