தமிழ்நாடு
திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க முடியாது.. போலீஸுக்கு கோர்ட் குட்டு

சென்னை: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்பும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சைதாப்பேட்டை கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருமுருகன் காந்தி நேற்று பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஐரோப்பாவில் இருந்து திரும்பியதும் அவர் கைது செய்யப்பட்டார்.

திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க முடியாது.. போலீஸுக்கு கோர்ட் குட்டு
இன்று விசாரணைக்காக தமிழ்நாடு கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில், அவரை சிறையில் எடுக்க கோரி விசாரணை நடந்தது.
இந்த நிலையில் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்பும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சைதாப்பேட்டை கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருமுருகன் காந்தி பேசியதில் என்ன தவறு இருக்கிறது, என்ன தேச துரோக கருத்துக்களை அவர் சொன்னார் என்று நீதிபதி கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.



















