இந்தியா

இந்தியை திணிக்க வேண்டாம்… இந்தி பேசும் ஆளுநர்களை யார் கேட்டா… மேகாலயாவில் எதிர்ப்பு குரல்!

Published

on

மேகாலயா மாநிலத்தில் ஆளுநர் உரையை இந்தியில் வாசித்தது அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து இந்தி திணிப்பு வேண்டாம் என சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

#image_title

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையில் பாஜக உள்ளிட்ட சில கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் முதல் கூட்டத்தொடர் கடந்த 20-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அன்றையை தினம் ஆளுநர் தனது உரையை இந்தியில் வாசித்தது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் இந்தி உரைக்கு எதிர்க்கட்சி தலைவர் அர்டெண்ட் மில்லர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். மேகாலயா ஒன்றும் இந்தி பேசும் மாநிலம் கிடையாது. ஏற்கனவே அஸ்ஸாம் மொழியை எங்கள் மீது திணித்ததால் தான் தனி மாநிலம் பெற்றோம். தற்போது வேறு மொழியை எங்கள் மீது திணிக்க வேண்டாம். ஆளுநர் எங்களுக்கு புரியும் மொழியில் பேச வேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தி பேசாத மாநிலங்களை மத்திய அரசு முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாநில மொழியில் பேசும் மக்களிடம் இந்தியை திணிக்க வேண்டாம். இந்தி பேசும் ஆளுநர்களை யார் கேட்டார்கள். வேண்டுமென்றே மத்திய அரசு அவர்களை அனுப்பி வைக்கிறது.

இவர்கள் பேசும் மொழியை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அவையில் இருந்து வெளியேறினோம். ஆளுநர் இந்தியில் பேசுவதை அவமானமாக உணராதவர்கள் அவையிலேயே இருந்து அவரது பேச்சை கேட்கட்டும். மேகாலயா மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அரசு செயல்படவேண்டும் என்றார்.

Trending

Exit mobile version