தமிழ்நாடு

திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி: ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை அதிரடி!

Published

on

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்சு விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில்லோடு திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில் திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை.

#image_title

நேற்று காலை அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் DMK Files என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், சபரீசன் என குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

இதனையடுத்து இன்று பாஜக தலைமையகாமன கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் குறித்த விவரங்களை தெரிவித்தார். மேலும் திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிடார்.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி கனிமொழி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் என சில தகவல்கள் வீடியோவாக வெளியிடப்பட்டு உள்ளன.

இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த பாகம் நீங்கள் நினைத்து பார்க்காத வகையில் இருக்கும். பினாமி சொத்து போன்றவற்றை அதில் பார்க்கலாம். ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட், ஜல்லிக்கட்டு என அனைத்திலும் கையெழுத்து போட்டது திமுக. என்னிடம் நிறைய பட்டியல் இருக்கிறது. இன்னும் 3 பட்டியலை வெளியிட உள்ளேன் என்றார்.

Trending

Exit mobile version