சினிமா செய்திகள்

’விக்ரம்’ படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் ‘விக்ரம்’ நாயகிகள்?

Published

on

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தின் சில காட்சிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ‘விக்ரம்’ படத்திலும் இடம்பெறுவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் ‘விக்ரம்’ படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் கமல்ஹாசனை இளமையாக காண்பிக்க மட்டும் ரூபாய் 10 கோடி செலவு செய்து இருப்பதாக கூறப்பட்டது .

இந்த நிலையில் 1986ஆம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனை உருகி உருகி காதலிக்கும் கேரக்டரில் டிம்பிள் கபாடியா மற்றும் லிசி ஆகிய இருவரும் நடித்திருப்பார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வெளியாகவுள்ள ‘விக்ரம்’ பிளாஷ்பேக் காட்சிகளில் டிம்பிள் கபாடியா மற்றும் லிசி ஆகிய இருவரும் ஓரிரு காட்சிகளில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவலை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரு காட்சி படத்தில் இருந்தால் கமல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிட தக்கது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Trending

Exit mobile version