தமிழ்நாடு

டெபாசிட் இழந்த ஜெயலலிதா? தவறான தகவலை கூறிய அண்ணாமலை

Published

on

அதிமுக பாஜக இடையேயான கருத்து மோதலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த தவறான தகவலை பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஜெயலலிதா டெபாசிட் இழந்ததாக கூறினார் அண்ணாமலை. ஆனால் உண்மையில் ஜெயலலிதா தோல்வியடைந்தாரே தவிர டெபாசிட் இழக்கவில்லை.

#image_title

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை மீது விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் ஒரு தலைவர். நான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறேன்.

ஜெயலலிதாவிற்கு தேர்தலில் டெபாசிட் போச்சு, துணிந்து நின்றார்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றார்கள். ஏன் என்றால் அவர் தலைவர், டெபாசிட் போனதற்காக ஜெயலலிதா பின்வாங்கவில்லை. ஜெயலலிதாவிற்கு டெபாசிட் போகவில்லையா போச்சு என கூறியிருந்தார். அண்ணாமலை ஜெயலலிதாவுக்கு டெபாசிட் போனது என கூறியது அதிமுகவினரை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

#image_title

ஏனென்றால், 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது அதிமுக. அதில், பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வி அடைந்தார். ஆனால் டெபாசிட் இழக்கவில்லை. திமுக வேட்பாளர் சுகவனம் 59,148 வாக்குகள் பெற்றிருந்தார். ஜெயலலிதா 50,782 வாக்குகள் பெற்றிருந்திருந்தார். வாக்கு வித்தியாசம் 8,366 மட்டுமே. இவ்வாறு பொய்யான தகவலை கூறி மறைந்த தங்கள் தலைவரை அண்ணாமலை இழிவுபடுத்தியதாக அதிமுகவினர் கூறிவருகின்றனர்.

Trending

Exit mobile version