Connect with us

கிரிக்கெட்

தோனி ஒரு சூப்பர் ஹீரோ: ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!

Published

on

ஐபிஎல் அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். சிஎஸ்கே (CSK) அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சூப்பர் ஹீரோ என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். ஆகையால், அவருடைய ஜெர்ஸிக்கு பிரத்யேகமான சிறப்பை சென்னை அணி சேர்க்க வேண்டும் என தான் நினைப்பதாகவும் இவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு ட்வீட்டும் அவர் செய்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி (MSD)

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5,000 ரன்களை குவித்த வீரர்களில் ஒருவராக இணைந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. லக்னோ அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி இந்த சாதனையை அவர் கடந்தார். தோனியின் அந்த இரு சிக்ஸர்கள் குறித்து தோனியின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் ஒருசிலர் லக்னோ அணியின் வெற்றியைத் தடுத்ததே அந்த இரண்டு சிக்ஸர்கள் தான் எனவும் சொல்கின்றனர்.

ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் மூலம் தோனி குறித்த தனது கருத்தை சொல்லி இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனியின் ஜெர்ஸிக்கு சிறப்பளிக்கும் வகையில் கேப் (தோள்பட்டையில் இருந்து தொங்கும் ஸ்லீவ்லெஸ் ஆடை) ஒன்றை உருவாக்க வேண்டும். ஒரு சூப்பர் ஹீரோ கேப் இல்லாமல் இருப்பதை எப்படி நாங்கள் எதிர்பார்க்க முடியும்? கேப் டிசைன் தொடர்பான சில மீம்களை முன்மொழியலாம்” எனவும் அவர் சொல்லி இருந்தார்.

இதன்படி தோனியின் ரசிகர்கள் சிலர் ஏஐ துணை கொண்டு உருவாக்கிய தோனியின் சில படங்களை பகிர்ந்தனர். அதில் ஒரு பதிவுக்கு ‘சரியாக இருக்கும்’ என ஆனந்த் மஹிந்திரா பதில் அளித்துள்ளார்.

சினிமா செய்திகள்3 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 வாரங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்2 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?

How to keep food in the fridge and heat it up to eat? And it is good or bad?
ஆரோக்கியம்2 மாதங்கள் ago

உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?