சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினியின் பாலிவுட் படத்தில் யாத்ராவுக்கு முக்கிய கேரக்டரா? தனுஷ் அதிர்ச்சி!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு பாலிவுட் படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியின் மகன் யாத்ரா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் தனது மகன்களுடன் தனுஷ் கலந்துகொண்டபோது யாத்ரா கிட்டத்தட்ட ஒரு ஹீரோவுக்கு உரிய அந்தஸ்து பெற்று விட்டதாகவே கருதப்பட்டது. அச்சு அசலாக தனுஷ் போலவே இருக்கும் அவர் விரைவில் சினிமாவில் நடிக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் யாத்ரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தனுஷ் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version