Connect with us

சினிமா செய்திகள்

Maaveeran: சிவகார்த்திகேயன் குழுவினருக்கு நடனக் கலைஞர்கள் நன்றி தெரிவித்தனர்

Published

on

யோகி பாபு நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ என்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின், தற்போது சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் ஜோடியாக நடிக்கும் ‘மாவீரன்’ படத்தை இயக்கி வருகிறார்.

மண்டேலா படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத் சங்கர் மாவீரன் இப்படத்துக்கும் இசையமைக்கிறார். பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென் மாவீரன் இப்படத்துக்காக சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.  மேலும் அதி நவீன மோகோபாட் புகைப்படக் கருவிகள் பயன்படுத்தி இப்படத்தின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்ற கேமராவை முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ திரைப்படத்திற்காக பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சீன் ஆ சீன் ஆ’ என்ற பாடலின் கிளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. 30 விநாடிகளுக்கும் குறைவான இந்தக் காட்சியில், சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து சென்னையைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆடினர். கபிலன், லோகேஷ் இணைந்து எழுதிய இப்பாடலுக்கு ஷோபி நடனப் பயிற்சி அளித்தார்.

இதையடுத்து நடனக்கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் சின்னி பிரகாஷ், பாபு, மாரி ஆகியோர் சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின், படத்தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். ‘மாவீரன்’ படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன், மிஷ்கின், சுனில் நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?