ஆரோக்கியம்

நாம் சாப்பாட்டில் ஒதுக்கி வைக்கும கறிவேப்பிலையில் இவ்வளவு நன்மைகளா?

Published

on

நாம் சாப்பாட்டில் ஒதுக்கி வைக்கும் கறிவேப்பிலையைக் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றில் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

ரத்தசோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்தசோகை நீக்கும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும், காலையில் கறிவேப்பிலையைப் பச்சையாக உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீதாக இருக்கும்.

கறிவேப்பிலையை உலர்த்தி, பொடி செய்து, தினம், காலை,மாலை தேனில் கலந்து சாப்பிட இதயம் வலுப்படும். கறிவேப்பிலை இதய நோய், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சியையில் இருந்தும பாதுகாப்பு தரும்.

சளித் தேக்கத்திலிருந்து நிவாரணம் பெற, ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள சறி முறிந்து வெளியேறிவிடும்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையுடன் ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து அரைத்து, அரைலிட்டர் தேங்காய் எண்ணெய் கலந்து, காய்ச்சி, தலைக்கு தேய்த்து வர பொடுகு நீங்கும்.

கறிவேப்பிலையின் முக்கியம்..

கறிவேப்பிலையில் வைட்டமின், மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. உடலில் சேரும் அதிகமான, கெட்ட கொழுப்பை அதிகரித்து, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதன் தனித்துவமான மணமும் சுலையும், குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வாகவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

வயிற்றுவலி, வாய்ப்புண் இருந்தால் கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி குடித்தால் சரியாகிவிடும்.

கண் பார்வை பிரகாசிக்க..

தினமும் நாம் உண்ணும் உணவில் கறிவேப்பிலை கிடந்தால் அதை தூக்கி எறிகின்றோம். எளிதில் கிடைப்பதால் கறிவேப்பிலையின் மகத்துவம் தெரியவில்லை.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ கரோய்ட்டினாய்டு சத்து நிரம்பியுள்ளது. இதனால், கண் பார்வை பிரசாகமாக இருக்கும். முடி உதிர்வை தடுப்பதிலும் முகப்பருக்களையும் நீக்குகிறது. உணவின் மனத்திற்கும் உடல் நலத்திற்கும் கறிவேப்பிலை பெஸ்ட் சாய்ஸ்.

Trending

Exit mobile version