உலகம்
சொந்த மகள்கள் உள்பட 20 பெண்களை திருமணம் செய்த நபர்.. போலீசார் அதிர்ச்சி
Published
2 months agoon
By
Shiva
சொந்த மகள்கள் உள்பட 20 பெண்களை திருமணம் செய்த நபர் குறித்த தகவல் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயது பேட்மேன் என்பவர் 15-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை திருமணம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று அறிவித்துக்கொண்டு மக்கள் மத்தியில் மத பிரச்சாரம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு அவர் தன்னை தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொண்டதாகவும், அது மட்டுமின்றி அவர் தொடர்ச்சியாக டீன்-ஏஜ் பெண்களை திருமணம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது .
46 வயதான பேட்மேன் இதுவரை 20 பெண்களை திருமணம் செய்து இருக்கிறார் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் தனது சொந்த மகளையே திருமணம் செய்து கொண்டதாகவும் அவரது மனைவிகளில் ஒருவருக்கு 9 வயது மட்டுமே ஆகிறது என்றும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து அமெரிக்க போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இன்னும் அவரால் பாதிக்கப்பட்ட மைனர் பெண்கள் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 46 வயது நபர் ஒருவர் தனது சொந்த மகள் உள்பட 20 பெண்களை திருமணம் செய்து கொண்டு மதப்பிரச்சாரம் செய்து வந்த தகவல் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You may like
-
திருமணத்திற்கு பெண் கேட்டு நடுரோட்டில் போஸ்டருடன் நின்ற வாலிபர்.. அவ்வளவு விளையாட்டா போச்சா?
-
28 வயது மருமகளை திருமணம் செய்து கொண்ட 70 வயது மாமனார்.. வைரல் புகைப்படம்!
-
கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி திருமணம்.. கோடிக்கணக்கில் குவிந்த பரிசுகள்
-
சகோதரரின் திருமணத்திற்காக பிரிட்டனில் இருந்து பறந்து வந்த பெண்.. வைரல் வீடியோ
-
வேலைநீக்க நடவடிக்கை.. அமெரிக்காவில் வேலையிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை இத்தனை ஆயிரமா?
-
கூகுளில் வேலையிழந்த இந்தியர்களின் H-1B விசா என்ன ஆகும்? ஊழியரின் அதிர்ச்சி பதிவு