சினிமா
‘குக் வித் கோமாளி’ அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ ஆல்பம்!

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ‘குக்’களில் ஒருவராக இருப்பவர் அஸ்வின் என்பது தெரிந்ததே. இவருக்கும் சிவாங்கிக்கும் உள்ள ரொமான்ஸ் மற்றும் இவருக்கும் புகழுக்கும் உள்ள காமெடி மிகச்சிறப்பாக இருக்கும் என்பதும் இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அரையிறுதி போட்டிக்கான தகுதி தேர்வில் அஸ்வின் தேர்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஸ்வின் ஒரு சில திரைப்படங்களிலும் குறும்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் தற்போது தனிப்பாடல் ஒன்றில் அவர் நடனம் ஆடியுள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையில் உருவான ’குட்டி பட்டாசு’ என்ற தனிப்பாடலில் அஸ்வின் மற்றும் ’பிகில்’ நடிகை ரெபா மோனிகா ஜான் இணைந்து நடனம் ஆடுகின்றனர். இந்த ஆல்பத்தின்டீசர் சற்று முன் வெளியான நிலையில் மிகப் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த ஆல்பத்தின் வீடியோ இதோ: