சினிமா

காந்தாரா கெட்டப்பை தொடர்ந்து பெண்ணாக மாறிய குக் வித் கோமாளி புகழ்!

Published

on

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான விஜய் டிவி புகழ் தற்போது சினிமாவிலும் பல படங்களில் காமெடியனாக கலக்கி வருகிறார். யோகி பாபு போல பெரிய முடியை வைத்துக் கொண்டு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் புகழுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அதே நேரத்தில் புகழ் செய்யும் காமெடிகள் எல்லாம் காமெடிகளே இல்லை என்றும் க்ரிஞ்ச் என்றும் அவரை ட்ரோல் செய்யும் ரசிகர்களும் அதிகம் உள்ளனர்.

#image_title

அஜித்தின் வலிமை, சந்தானத்தின் சபாபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள புகழ் விஜய்சேதுபதி உடன் டிஎஸ்பி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் யோகி பாபுவுக்கு கிடைத்ததை போல பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் சமீபத்தில் காந்தாரா கெட்டப் போட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார்.

#image_title

சுமார் 4 மணி நேரம் மெனக்கெட்டு அந்த கதாபாத்திரத்துக்கான மேக்கப்பை போட்டதாக புகழ் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், கருப்பு நிற சேலையை அணிந்து கொண்டு பெண் வேடமிட்டு அசத்தி உள்ளார் புகழ்.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்ட புகழ், மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் பெண் வேடம் போட்டு இருக்கிறேன். மக்கள் மத்தியில் புகழ் யார் என்று தெரிய வைத்தது இந்த வேடம் தான். மீண்டும் அதனை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி. இத்தனை தூரம் என்னை அழைத்து வந்துள்ள என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவோடு மக்களை மகிழ்விப்பேன். அன்பும், நன்றிகளும்…என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. மன்னிகனும் குஷ்பு சுந்தர்” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Trending

Exit mobile version