தமிழ்நாடு

ராகுல் காந்திக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் இன்று ரயில் மறியலில் ஈடுபடும் காங்கிரஸ்!

Published

on

அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தனது எம்.பி. பதவியை இழந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்து வரும் நிலையில், இன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்கிறார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவதூறாக பேசினார் என்பதைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, தனது எம்.பி. பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ரயில் மறியல் போராட்டம்

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று (ஏப்ரல் 15) ரயில் மறியல் போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்து வரும் நிலையில், நான் எதற்கும் பயப்பட மாட்டேன் என்று ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் பேசிய போது கூறினார். மேலும், பிரதமர் மோடியின் ஆதரவாளர்களுக்காகத் தான் இந்த பாஜக அரசு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending

Exit mobile version