தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. இதை செய்யலனா தண்ணீர் வராது.. உஷார்!

Published

on

சென்னை குடியிருப்பு வாசிகள் குடிநீர் விநியோக பயன்பாட்டுக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால், தண்ணீர் வழங்குவது நிறுத்தப்படும் என சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் எச்சரித்துள்ளது.

சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சி கணக்கின் படி அரையாண்டு வரியைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் சூத்திரம் சென்னை மாநகராட்சியின் வருடாந்திர வாடகை மதிப்பு * 3.5%. இதுவே ஒரு வருடம் என்றால் 7 சதவிகிதம்.

உதாரணமாக, சென்னை மாநகராட்சியின் ஆண்டு வாடகை மதிப்பு ரூ.2,00,000 என்றால், அரையாண்டு வரி ரூ.7000 ஆக இருக்கும். முழு ஆடு என்றால் 14 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.

சொத்து வரியை போன்று ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களில் இந்த கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இந்த வரியை சரியான நேரத்தில் செலுத்தத் தவறினால், சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் விதிமுறைகளின்படி நீர் வழங்கல் மற்றும் வடிகால் இணைப்பு துண்டிக்கப்படும்.

இணைப்புகள் துண்டிக்கப்பட்ட பிறகும், நிலுவையில் உள்ள வரி செலுத்தப்படாவிட்டால், சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி, அந்தச் சொத்து பறிமுதல் செய்யப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள நிலுவைத் தொகையைச் செலுத்த குடிமக்களுக்கு உதவ, அனைத்து மண்டல அலுவலகங்களும், தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டணக் கவுன்டர்களும் அனைத்து வேலை நாட்களிலும் சனிக்கிழமைகளிலும் செயல்படும்.

ஆன்லைனில் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற இணைப்பிற்குச் சென்று உங்கள் வீட்டிற்கான குடிநீர் விநியோக பயன்பாட்டுக் கட்டணத்தைக் கணக்கிட்டுச் செலுத்த முடியும்.

யூபிஐ செயலிகள் மூலம் குடிநீர் விநியோக பயன்பாட்டுக் கட்டணத்தைச் செலுத்த QR குறியீட்டையும் அறிமுகம் செய்துள்ளது.

Trending

Exit mobile version