Connect with us

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம் வாங்கினார்… சிபிஐயில் புகார் அளிப்பேன்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

Published

on

திமுகவினரின் ஊழல் பட்டியலை இன்று வெளியிடுவேன் என கூறியிருந்த பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதனை வெளியிட்டார். அதில் முதல்வர் ஸ்டாலின் 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் இது தொடர்பாக சிபிஐயில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அண்ணாமலை.

#image_title

முதல்வர் ஸ்டாலின் குறித்து அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு: 2006-2011 திமுக ஆட்சியில் தேர்தலுக்கு 6 மாதமே உள்ள நிலையில் சிறப்பு திட்டமாக சென்னையில் மெட்ரோ கட்ட அனுமதி வருகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 14,600 கோடி ரூபாய். இதற்கான டெண்டரில் விமல் என்ற இந்திய நிறுவனம், அல்ஸ்டாம் மற்றும் சி.ஏ.எஃப்.எம்.சி என்ற ஸ்பெயின் நிறுவனம் என மூன்று நிறுவனங்கள் பங்கேற்கிறது. டெண்டர் முடிய சில நாட்கள் இருக்கும் போது கஸ்டம் டியூட்டி சேர்க்க போகிறோம் என சொல்கிறார்கள். ஆனால் மத்திய அரசின் எக்சிம் பாலிசியின் படி எந்த காரணத்துக்காகவும் கஸ்டம்ஸ் டியூட்டி சேர்க்கக் கூடாது.

கஸ்டம் டியூட்டிக்கு முன்னர் இந்த டெண்டரில் சி.ஏ.எஃப்.எம்.சி நிறுவனம் 1,417 கோடி ரூபாய் மதிப்பில் தேர்வாகிறது. இரண்டாவது இடத்தில் அல்ஸ்டாம் நிறுவனம் 1,439 கோடியில் உள்ளது. இவர்கள் கஸ்டம்ஸ் டியூட்டி கொண்டு வந்த உடன் இரண்டாவது இடத்தில் இருந்த அல்ஸ்டாம் முதலிடத்துக்கு வந்து டெண்டரை பெறுகிறது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு 722 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்.

#image_title

இப்படி இருக்கையில் கஸ்டம் டியூட்டியை கொண்டு வந்து அல்ஸ்டாம் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்படுகிறது. இதில் எங்களுடைய நேரடி குற்றச்சாட்டு என்னவென்றால், முதல்வர் ஸ்டாலினுக்கு 200 கோடி ரூபாய் அல்ஸ்டாம் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை சிங்கப்பூர் நிறுவனமான இண்டோ யூரோப்பியன் வெண்ட்சர் பிரைவேட் லிமிடெட் மூலம் கொடுத்துள்ளார்கள்.

2011 தேர்தல் செலவுக்காக 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 15 சதவீதம் பங்களிப்பு செய்துள்ளது. எனவே சிபிஐ இயக்குநரிடம் முதல்வர் ஸ்டாலின் மீது புகார் அளிக்க உள்ளேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

வணிகம்9 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?