தமிழ்நாடு

‘முதல்வன்’ பாணியில் ஆய்வு செய்த முதல்வர்: பணியில் இல்லாத ஊழியர் சஸ்பெண்ட்!

Published

on

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன் பாணியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்து பணியில் இல்லாத ஊழியரை சஸ்பெண்ட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அர்ஜுன் நடித்த முதல்வன் திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜுன் நடித்து இருப்பார் என்பதும் அந்த ஒரு நாளில் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து பல அரசாங்க ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தார் என்பதும் அது மட்டுமன்றி முதல்வரையே கைது செய்வார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்

அந்த வகையில் ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில் முதல்வர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் ஆய்வு செய்தபோது பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய அதிகாரியை அவர் சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

முதல்வன் பாணியில் அதிரடியாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Trending

Exit mobile version