Connect with us

சினிமா

நீ என்னை மன்னிக்க மாட்டாய் பவானி!… யாஷிகா ஆனந்த் கண்ணீர் பதிவு….

Published

on

yashika

சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் படுவேகமாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அவரின் தோழி பவானி என்பவர் உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். ஒரு வார சிகிச்சைக்குபின் அவர் வீடு திரும்பியுள்ளார். அவர் மீது காரை வேகமாக ஓட்டியது, விபத்து ஏற்படுத்தியது என்பது உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

yashika

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் ஒரு கண்ணீர் பதிவை இட்டுள்ளார். அதில் ‘ என்னால் எதுவும் கூற முடியவில்லை. வாழ்வதற்கே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. அந்த விபத்திலிருந்து நான் பிழைத்ததற்காக கடவுளிடம் நன்றி சொல்வதா அல்லது என் நெருங்கிய தோழியை என்னிடமிருந்து எடுத்துக்கொண்ட கடவுளை குறை சொல்வதா என தெரியவில்லை. உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் பவானி. எனக்கு தெரியும் நீ என்னை மன்னிக்கமாட்டாய். உன் குடும்பத்திற்கு துயரத்தை கொடுத்துவிட்டேன். உன் ஆத்மா அமைதி கொள்ளட்டும். நீ என்னிடம் திரும்பி வர பிரார்த்தனை செய்கிறேன். என்றோ ஒரு நாள் உன் குடும்பம் என்னை மன்னிப்பார்கள்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும், என் பிறந்தநாளை கொண்டாடும் மன நிலையில் நான் இல்லை. எனவே, என் ரசிகர்களும் கொண்டாட வேண்டாம். என் தோழியின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். இது என் வாழ்வில் பெரிய இழப்பு. என்னை மன்னித்துவிடு. ஐ மிஸ் யூ’ என பதிவிட்டுள்ளார்.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?