விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு – #VIJAY65 கலக்கல் அப்டேட்!

விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு – #VIJAY65 கலக்கல் அப்டேட்!

தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் 'விஜய் 65' என்று அழைத்து வருகிறார்கள். 'கோலமாவு கோகிலா' மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், 'விஜய் 65' படத்தை இயக்குகிறார். அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கி முடித்துள்ள 'டாக்டர்' படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில வாரங்களில் டாக்டர் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது இயக்குனர் நெல்சன், ஜார்ஜியாவில் விஜய் உள்ளிட்டவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து 100 பேர் கொண்ட குழு ஜார்ஜியாவுக்கு சென்றது. அவர்களுக்கு சென்னையிலும் ஜார்ஜியாவிலும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்படி இருந்தும் அந்த குழுவில் இருவருக்குக் கொரோனா தொற்று இருப்பதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஆனாலும் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த மாத இறுதியில் அங்கு படப்பிடிப்பை முடிக்கும் படக்குழு சென்னை திரும்புகிறதாம். அதன் பின்னர் சென்னை, ஐதராபாத் மற்றும் முமபை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து சிறு இடைவெளிகளில் படம்பிடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com