சூர்யா இல்லாமலேயே #Suriya40 படப்பிடிப்பு ஆரம்பித்தது – லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா இல்லாமலேயே #Suriya40 படப்பிடிப்பு ஆரம்பித்தது – லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் சூர்யாவின் அடுத்தப் படம் இன்று பூஜையுடன் ஆரம்பித்தது. இந்தப் பூஜை போடும் விழாவில் சூர்யா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்னர் சூர்யாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதற்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து பூரண உடல் நலம் பெற்று விட்டார். இருந்த போதிலும் வீட்டுத் தனிமையில் சூர்யா இருக்கிறார். இதையொட்டி அவர் பட பூஜையில் கலந்து கொள்ளவில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க ஆரம்பிப்பார் எனவும் கூறப்பட்டு உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sun Pictures (@sunpictures)

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். பிரயங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sun Pictures (@sunpictures)

கடைசியாக சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் மாபெரும் வெற்றி பெற்றது படம். இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 40வது படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை முடித்து விட்டு, அடுத்ததாக இயக்குநர் வெற்றி மாறன் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com