’மாநாடு’ ரிலீஸ் குறித்து சுரேஷ் காமாட்சியின் முக்கிய அறிவிப்பு!

’மாநாடு’ ரிலீஸ் குறித்து சுரேஷ் காமாட்சியின் முக்கிய அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் 'மாநாடு' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஊடகங்களிலும் ஒரு சில சமூக வலைதள பயனாளிகளும் தகவல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று ஒரு சிலர் அறிவித்துள்ள நிலையில் இதுகுறித்து 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

சிம்பு ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஒரு விளக்கம் அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். 'மாநாடு' படத்தின் ரிலீஸ் தேதியை நாங்கள் இன்னும் உறுதி செய்யவில்லை. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் மற்றும் பொய்யானவை. எனவே அந்த செய்திகளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

எங்கள் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் 'மாநாடு' படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம். அதுவரை பொறுமை காக்கவும், அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து 'மாநாடு' படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் படக்குழுவினர் முடிவு செய்யவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com