Connect with us

சினிமா செய்திகள்

சன் குழுமத்தின் ரூ.600 கோடி தமிழ் திரைப்பட தயாரிப்பு திட்டம்!

Published

on

கலாநிதி மாறன் தலைமையிலான சன் டிவி குழுமம், 600 கோடி ரூபாய் முதலீட்டில் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

சன் குழுமம் தொலைக்காட்சி, திரைப்படங்கள், ஓடிடி, டிடிஎச், பத்திரிக்கைகள் என்று பல்வேறு தளங்களில் தென் இந்தியாவில் தங்களது வணிகத்தைச் செய்து வருகிறது.

சென்ற ஆண்டு பெங்காலியில் சன் பாங்லா சேனல் தொடங்கப்பட்டது. அடுத்ததாக சன் மாராட்டி சேனல் தொடங்குவதற்கான பணியிலும் உள்ளது.

மறுபக்கம் தென் இந்தியாவில் தங்களது வணிகத்தை அதிகரிக்க, 400 கோடி ரூபாய் முதலீட்டில் முக்கிய நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளது.

சன் பிக்சர்ஸ் கையில் இப்போது ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த, விஜய்யின் தளபதி 65, சூர்யா 40, தனுஷ் 44, ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் எனப் பட்டில் நீள்கிறது.

அதுமட்டுமல்லாமல் வளர்ந்து வரும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்காகவும் 200 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் நேரடி ஓடிடி, தொலைக்காட்சிகளுக்கான திரைப்படங்களை சன் குழுமம் தயாரிக்கிறது.

சன் குழுமத்தின் இந்த திட்டத்தைப் பார்க்கும் போது 2021-ம் ஆண்டு சன் பிக்சர்ஸ் திரை அரங்குகள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி, ஓடிடி தளங்களிலும் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?