சிம்புவின் ‘மாநாடு’ சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? புதிய தகவல்

சிம்புவின் ‘மாநாடு’ சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? புதிய தகவல்

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான மாநாடு படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இம்மாத இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க வெங்கட்பிரபு திட்டமிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவிலான நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் பாடலை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தயாராகி வருகின்றன.

மாநாடு படத்தின் சிங்கிள் பாடலை ரம்ஜான் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகிஉள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன்என்ற திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாத நிலையில் சிம்புவின் மாநாடு திரைப்படம் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, உள்பட பலர் நடித்துள்ளனர். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com