சி.ஒ.கா கிருஷ்ணாவின் தெலுங்கு பயணம்

சி.ஒ.கா கிருஷ்ணாவின் தெலுங்கு பயணம்

'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணாவை நாம் மறந்திருக்க முடியாது. இன்று வரை இணைய உலகிலும் ரிங்க்டோனாகவும் வால்பேப்பராகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற படம் அது.

அதன்பின் அவர் நடிகர் ஆரியை வைத்து 'நெடுஞ்சாலை' என்ற படத்தைக் கொடுத்தார். அந்த படம் மக்களிடம் பரவலாகப் பேசப்பட்டதென்றாலும் பாடல்கள் பிரபலமாயின.
தற்போது அந்த இயக்குநர் 'ஆர்.எக்ஸ் 100' படத்தில் நடித்த நடிகர் கார்த்திகேயனை வைத்து அடுத்த படம் தெலுங்கில் இயக்குவதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். கிருஷ்ணா தெலுங்கில் வேறு சில படங்கள் இயக்கியிருந்தாலும் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என இப்படத்தின் நாயகன் தெரிவித்துள்ளார்.
No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com