சினிமா
‘ரகிட ரகிட ரகிட’ பாடலுக்கு சிம்ரன் போட்ட செம டேன்ஸ்… வைரல் வீடியோ
தமிழ் சினிமாவில் நடித்த நாயகிகளில் நடனம் தெரிந்த நடிகை வெகு சிலர்தான். அதில், சிம்ரன் முக்கியமானவர். விஜயுடன் அவர் ‘ஆடிய ஆள் தோட்ட பூபதி’ பாடலில் கூட சிம்ரன்தான் அதிகம் பெயர் வாங்கினார். இதை விஜயே ஒத்துக்கொண்டார். 15 வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.
கடந்த சில வருடங்களாக சிம்ரன் தனது 2வது இன்னிங்ஸை துவங்கியுள்ளார். நல்ல வேடம் கிடைத்தால் நடித்து வருகிறார். அதோடு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினிமா பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் இடம் பெற்ற ‘ரகிட ரகிட ரகிட’ நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram