காரக்குழம்பு சாப்பிட கனியின் வீடுதேடி சென்ற சிம்பு: வைரல் புகைப்படங்கள்!

காரக்குழம்பு சாப்பிட கனியின் வீடுதேடி சென்ற சிம்பு: வைரல் புகைப்படங்கள்!

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனிக்கு இன்னொரு பெயர் காரக்குழம்பு என்று அந்த குழுவினர் வைத்து விட்டனர் என்பதும் ஏஆர் ரஹ்மான் கூட இன்று கார குழம்பு வைக்க போறீங்களா என்று கிண்டலுடன் கேட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கனியின் காரக்குழம்பை ருசித்து சாப்பிட சிம்பு தனது நண்பர்களுடன் கனி வீட்டிற்கு சென்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே அன்று சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த சிம்பு, கனியிடம் உங்களுடைய காரக்குழம்பை ஒருநாள் சாப்பிடவேண்டும், உங்கள் வீட்டிற்கு ஒருநாள் வருகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

அதன்படி சமீபத்தில் அவர் கனியின் வீட்டுக்கு சென்ற நிலையில் அவரை கனி மற்றும் அவரது கணவர் திரு ஆகியோர் வரவேற்றனர். இந்த நிலையில் காரக்குழம்பு சாப்பிட்டு சிம்பு அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக திரு தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். சிம்பு உடன் அவரது நண்பர் மகத் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் சென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com