‘அகில உலக சூப்பர்ஸ்டார்’-ன் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான்- ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியீடு!

‘அகில உலக சூப்பர்ஸ்டார்’-ன் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான்- ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியீடு!

'அகில உலக சூப்பர்ஸ்டார்' என தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டவர் நடிகர் சிவா. அவரின் அடுத்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 

'தமிழ் படம்' மூலம் தமிழ்த் திரையுலகில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சிவா. தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வரும் சிவா, அவ்வப்போது நிகழ்ச்சிகளையும் ஹோஸ்ட் செய்து வருகிறார். வானொலி தொகுப்பாளராக தன் திரைப் பயணத்தை ஆரம்பித்த சிவா, இன்று முன்னணி காமெடி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். 

கடைசியாக அவர் நடிப்பில் வெளி வந்த 'தமிழ் படம் 2'-ம் மெகா ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் படம் தான் 'இடியட்'.

'லொல்லு சபா' நிகழ்ச்சியை வெகு நாட்கள் இயக்கி வந்த ராம்பாலா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை ஸ்கிரீ்ன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது. வரும் 25 ஆம் தேதி இந்தப் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிக்கி கல்ரானி இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஹாரர் காமெடி ஜானரில் இந்தப் படம் எடுக்கப்படுவதால் சிரிப்புக்குப் பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. 

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com