தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி - விமர்சனம்

தமன்னா நடிப்பில் வெளியாகியிருக்கும் நவம்பர் ஸ்டோரி எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்...
தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி - விமர்சனம்
நவம்பர் ஸ்டோரி

நவம்பர் ஸ்டோரிஸ்’ தமன்னா நடிப்பில் ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ். க்ரைம் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது.

சுகன் என்ற பெயரில் க்ரைம் த்ரில்லர் நாவல்களை எழுதும் கணேசன் என்பவரின் மகள் அனு. வயதான சுகனுக்கு ஞாபக மறதி வியாதி வருகிறது. அதை குணமாக்க வேண்டும் என்றால் 80 லட்ச ரூபாய் தேவை. இதற்காக அவர்களுக்கு சொந்தமான ஒரு பழைய வீட்டை விற்க முயற்சி செய்கிறார் தமன்னா. அதற்கு இடையே அந்தப் பழைய வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையோடு சுகன் எப்படித் தொடர்பு படுத்தப்படுகிறார். அதில் இருந்து எப்படி அவரை தமன்னா வெளியே கொண்டு வருகிறார் என்பதை 7 எபிசோடுகளில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் இந்திரா சுப்ரமணியன். சுகனா சி.எம்.குமார், அவரது மகள் அனுவாக தமன்னா, கொலையைக் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியாக அருள் தாஸ், இந்தக் கொலைக்கு உதவியாக பசுபதி குழந்தை ஏசு என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் நான்கு பேரும் தான் கதையின் முக்கிய பாத்திரங்கள். இதில் குழந்தை ஏசுவாக நடித்திருக்கும் பசுபதி தான் கதையை நகர்த்துகிறார்.

கதாபாத்திரங்கள்
கதாபாத்திரங்கள்

இந்த நான்கு பேரும் தாங்கள் எடுத்துக்கொண்ட பாத்திரத்தைக் கட்சிதமாக செய்திருக்கிறார்கள். பசுபதியெல்லாம் எங்கயோ போயிருக்க வேண்டிய நடிகர் ஆனால், இன்னும் அவருக்கான அடையாளம் கிடைக்காமல் இருக்கிறார் என்பது மிகப்பெரிய சோகம்தான். கதை, அதற்கான பின்னணி இசை, கதைக்களம், செட் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். கதைக்கான த்ரில்லை கூட்டுவதற்கு இவையெல்லாம் உதவுகின்றன. நிறைய சஸ்பென்ஸோடு நல்ல மேக்கிங்கில் வந்திருக்கிறது.

நவம்பர் ஸ்டோரி
ஜோஜி – விமர்சனம்!

த்ரில்லர் கதைக்கான ட்விஸ்டுகள் நிறைய இருக்கின்றன. பார்க்க சுவாரஸ்யமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் யப்பா போதும்டா உங்க ட்விஸ்ட் கதையை நகர்த்துங்கடா என்று கெஞ்சும் அளவிற்கு ஓவர் ட்விஸ்ட் ஓவர் டோஸாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு ட்விஸ்ட். கொஞ்சம் ட்விஸ்ட்-கள் ஓவர் பில்டப்பாகவும் இருந்தது சகிக்க முடியவில்லை. த்ரில்லர் கதைகளில் ஒரு கொலை அதற்கான காரணங்கள் அவற்றை இணைக்கும் விதம் தான் சுவாரஸ்யத்தை கூட்டும். அதற்கான அத்தனை அம்சங்களும் இதில் இருக்கின்றன. ஆனால், ஓவராக இருக்கிறது. இதை ஒரு 5 எப்பிசோடுகளில் சொல்லியிருந்தால் இன்னும் கூட சுவாரஸ்யம் அதிகமாக இருந்திருக்கும். ஆனால், 7-வரை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை. அதுவும் கடைசி எப்பிசோடில் எல்லாம் ஓவர் இழுவை. வழக்கம் போல இறுதியில் பல கதாபாத்திரங்கள் காணாமல் போய்விட்டன அது ஏன் என்ற விவரமும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. மஹ்த பாஹ்திரங்கள் கூட பராவியில்லை. கொலையை விசாரணை செய்த அருள் தாஸ் கதாபாத்திரமும் தொலைந்து போனதுதான் சோகம்.

நல்ல கதை… நிறைய ட்விஸ்ட்… ஆனால், இன்னும் கூட கொஞ்சம் சுருக்காம சொல்லியிருந்தால் இந்த நவம்பர் ஸோடோரி பெரிய ஹிட் லிஸ்டில் இருந்துருக்கும். ஆனாலும் மத்த தமிழ் சீரியஸை ஒப்பிடும் போது இது எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் இருந்தது. பார்த்துவிடுங்கள்…

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com