ஃபேமிலி மேன் - 2 இயக்குநருக்கு கடுகளவு கூட அரசியல் அறிவு இல்லை எப்படி?
Family man 2

ஃபேமிலி மேன் - 2 இயக்குநருக்கு கடுகளவு கூட அரசியல் அறிவு இல்லை எப்படி?

அமேசன் பிரேமில் வெளியாகியிருக்கும் ஃபேமிலி மேன் - 2. எந்த அறிவியல் அறிவும் இல்லாமல் எடுக்கப்பட்ட தேசியத் தூக்கிப்பிடிக்கும் தொடர். ஆனால், தேசியத்தையும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் சோகம்...

இலங்கையில் செயல்பட்ட தீவிரவாத இயக்கமொன்றின் தலைவர் பாஸ்கரன்; லண்டனில் வசித்து வருகிறார். இவரும் இவரின் தோழர்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதை இந்தியாவும் அங்கீகரிக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். அந்தக் கோரிக்கையை இங்குள்ள அரசியல்வாதிகளிடம் முன்வைப்பதற்கு பாஸ்கரனின் தம்பி சென்னை வருகிறான். இலங்கையுடனான தன் நட்புறவை வளர்த்துக்கொள்வதற்கு, பாஸ்கரனின் தம்பியை இலங்கை அரசிற்குப் பிடித்துத்தர முடிவு செய்கிறார் இந்தியப் பிரதமர். சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் அவனைக் கைது செய்கிறார்கள். ஆனால், சீக்கிரமே ஒரு குண்டு வெடிப்பில் கொல்லப்படுகிறான் அவன். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, ISIS தீவிரவாத அமைப்பைச் சார்ந்த சமீர் என்பவரோடு இணைகிறான். அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னையில் இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தத் திட்டமிடுகிறார்கள். அத்தாக்குதலை நடத்தவிருப்பவர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சில ஈழத் தமிழர்கள்.

Family man 2
Family man 2

இலங்கையில் பாஸ்கரனின் இயக்கத்தில் தீவிரப் பயிற்சி பெற்ற போராளிகள் மட்டுமல்ல, தலைவரிடமிருந்து எப்போது உத்தரவு வந்தாலும் மனித வெடிகுண்டுகளாகவும் மாறக் காத்திருக்கும் ஸ்லீப்பர் செல்கள். பாஸ்கரனின் இத்திட்டம் குறித்து இந்தியப் புலனாய்வுத் துறைக்குத் தெரிய வருகிறது. எவ்வாறு பாஸ்கரனின் திட்டத்தை இந்தியப் புலனாய்வுத் துறை முறியடிக்கிறது என்பதுதான் ஃபேமிலி மேன் சீசன் 2வின் கதையும் திரைக்கதையும். அமேசான் ப்ரைமில் 9 எபிட்சோடுகளாக வெளியாகியிருக்கிறது.

Family man 2
மலேசியா டூ அம்னீசியா – விமர்சனம்

முதல் சீசனில் இஸ்லாமியர்கள் என்றால் இந்தத் தொடரில் தமிழர்கள். பொழுது போக்காக இந்த சீரியஸ் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அரசியலாக இந்தப் படம் ஒரு அபத்தத்தின் உச்சம். கடுகளவு கூட அரசியல் அறிவும் பிறர் மீது அக்கறையும் இல்லாத ஒருவரால் மட்டுமே இந்த அளவு த்ராபையான படைப்பை கொடுக்க முடியும். ஈழப் போராட்டமோ விடுதலைச் சிறுத்தைகள் அமைப்போ தலைவர் பிரபாகரனோ எந்த தீவிரவாத நடவடிக்கையிலும் ஈடுபட வில்லை. அவர்கள் ஒரு சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம், இன விடுதலைக்காக இறுதி வரை போராடியவர்களை இவ்வளவு மோசமாகச் சித்திரித்து அறம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறார்கள். தமிழகத்தில் ஈழப் போராட்டத்திற்கான ஆதரவு இருந்தது தான் என்றாலும் இதில் வருவது போல யாரும் சட்டத்திற்குப் புறம்பாகவோ ஊர் கூடிக் காவல் நிலையத்தைத் தாக்குவது போன்றோ எந்த வன்முறையும் நடைபெற வில்லை.

குடியை வேண்டாம் எனச் சொல்லும் ஈழத்தின் தலைவர் தான் அங்கே இருந்து குடித்துக் கொண்டிருக்கிறார். இலங்கையிலிருந்து தப்பிச் சென்று இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். தமிழர்களுக்குத் தமிழர்களே காட்டிக் கொடுத்து எதிரியாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல இந்தியப் பிரதமரைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்கள் என்றெல்லாம் எவ்வளவு கொடூரமான புத்தியோடு இந்தப் படைப்பை இயக்கி இருக்கிறார். இதில் என்ன கொடுமை என்றால் நடித்த பலரும் தமிழர்கள். காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் போல.

Family man 2
தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி - விமர்சனம்

கருத்துச் சுதந்திரத்தை எதிர்க்காதீர்கள் என்கிறார்கள். முயலைக் கொலை செய்யும் நாய் சொல்லும் நியாயம் போலத்தான் இருக்கிறது இவர்கள் சொல்லும் கருத்து சுதந்திரம். இதுபோல முழுத் தொடர் இல்லை ஒரு சிறு வசனம் வைக்க முடியுமா? தேசியம் தொடர்பாக, மதம் தொடர்பாக. பா.ஜ.க-வும், காங்கிரஸும் என எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் சரி அவை எப்போதும் தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராகத்தான் இருப்பார்கள் என்பது மேலும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

Family man 2
Family man 2

இதைவிடக் கொடுமை என்னவென்றால் இதன் அடுத்த தொடருக்கான லீடு வடகிழக்கு மாநிலங்களை நோக்கி நீள்கிறது. நமக்காவது குரல்வளை இருக்கிறது கத்த. அங்கெல்லாம் அது அறுக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. உண்மையில் அரசியலையும் சிறுபான்மையினரையும் கருத்துச் சுதந்திரத்தையும் இவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இதைப் பார்க்கும் போது உங்களுக்குக் கொஞ்சமும் அறுவறுப்பு ஏற்படவில்லை என்றால் நீங்களும்….

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com