சினிமா செய்திகள்
ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
சுந்தர்.சியின் ஆவ்னி மூவிஸ் தயாரிப்பில் இரண்டாவது முறையாக ஹீரோ ஆகியுள்ள இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நட்பே துணை கடந்த வியாழனன்று வெளியானது.
வெளியான மூன்று நாட்களில் படத்தின் வசூல் தமிழகம் முழுவதும் 8 கோடி ரூபாய் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மட்டும் 1 கோடி வசூல் செய்துள்ளது.
ஞாயிற்றுக் கிழமையான நேற்று மேலும், வசூலை வாரிக் குவிக்கும் என்றும் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வரும் என்றும் தெரிகிறது. மீசையை முறுக்கு ஓபனிங்கை விட ஹிப் ஹாப் ஆதிக்கு நட்பே துணை அதிக வசூலை ஈட்டித்தந்துள்ளது அவரது வளர்ச்சியை காட்டுகிறது.