கொரோனாவுக்கு பலியான பிரபல இசையமைப்பாளர்: திரையுலகினர் இரங்கல்

கொரோனாவுக்கு பலியான பிரபல இசையமைப்பாளர்: திரையுலகினர் இரங்கல்

பிரபல இசையமைப்பாளர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பாலிவுட் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர்கள் ஆக இருந்தவர்கள் நதீம்-ஷர்வன் ஆகிய இரட்டையர்கள். இந்த இரட்டையர்களின் இசையமைப்பில் உருவான பல திரைப் படங்கள் சூப்பர் ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த இரட்டையர்களில் ஒருவரான ஷர்வன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாலிவுட் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ஷர்வன் அவர்களின் மறைவு குறித்து கேள்விப்பட்ட திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமான், அக்ஷய் குமார், ஸ்ரேயா கோஷல் உள்பட பலர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் ஷர்வன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மிகப் பெரிய இசை மேதையான ஷர்வன் அவர்களின் மறைவு பாலிவுட் திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு என்று அவர்கள் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com