மாரி 2வை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்!

மாரி 2வை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை சமீபத்தில் பார்த்து அசந்து போன நடிகர் தனுஷ், அடுத்த படத்தில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த புதிய படத்தை கலைப்புலி எஸ். தாணுவின் வி. கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் அதில் தான் நடிக்கவுள்ளதாகவும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இளம் கலைஞரை வளர்த்து விடும் தனுஷ், திறமையான ஒரு இளம் இயக்குநருக்கு வாய்ப்பளித்திருப்பது கோலிவுட்டில் பாராட்டை பெற்றுள்ளது.

மாரி 2 படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளது கூடுதல் சிறப்பு!

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com