தனுஷ் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்கும் மாரி செல்வராஜ்: உறுதி செய்யப்பட்ட தகவல்!

தனுஷ் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்கும் மாரி செல்வராஜ்: உறுதி செய்யப்பட்ட தகவல்!

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜுக்கு திரையுலக பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் தனுஷ் படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் 'கர்ணன்' படத்தை முடித்துவிட்டு தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான பணிகளில் மாரிசெல்வராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சற்று முன்னர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் எனது மற்றொரு படத்தையும் மாரிசெல்வராஜ் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டது என்றும் அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை தனுஷூக்காக இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'கர்ணன்' என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அடுத்து மீண்டும் தனுஷ்-மாரி செல்வராஜ் இணையவிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com