‘உப்பென்னா’ பட நாயகி தனுஷுக்கு ஜோடியாகிறார்!!

‘உப்பென்னா’ பட நாயகி தனுஷுக்கு ஜோடியாகிறார்!!

தெலுங்கில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'உப்பென்னா'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். யாரும் எதிர்பாராத வகையில் விஜய் சேதுபதியின் கேரக்டருக்கு நல்ல ரீச் கிடைத்தது. படமும் மெகா ஹிட் அடித்தது. புது முகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் மிகப் பெரும் வரவேற்பை கொடுத்தனர். இந்தப் படம் மூலம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானார் நடிகை கீர்த்தி ஷெட்டி. அவருக்குத் தற்போது தெலுங்கில் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. 

படம் ரிலீஸ் ஆனது முதல் ரசிகர்களால் கொண்டாடப்படும் அவருக்கு இப்போது வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழில் தனுஷை வைத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் அவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார். ஹாலிவுட் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு வந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தை தனுஷ் முடித்துக் கொடுக்கிறார். அதைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

தனுஷ், இந்த இரு படங்களை முடித்துக் கொடுத்தவிட்டு மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு அப் படத்திற்கான ஷூட்டிங் தொடங்க உள்ளது. 

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com