ஓடிடியில் ‘கர்ணன்’ திரைப்படம் ரிலீஸ் ஆவது எப்போது?

ஓடிடியில் ‘கர்ணன்’ திரைப்படம் ரிலீஸ் ஆவது எப்போது?

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிய 'கர்ணன்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே.

திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் 'கர்ணன்' படத்தை பாராட்டி பதிவுகள் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'கர்ணன்' திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அனேகமாக 'கர்ணன்' திரைப்படம் 'கர்ணன்' மே 7-ஆம் தேதி வெளியாகும் என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'கர்ணன்' திரைப்படத்தை திரையில் தற்போது பார்க்க இயலாத அளவிற்கு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் திரையரங்களில் பார்க்காதவர்கள் ஓடிடியில் கண்டு ரசிக்கும் வகையில் விரைவில் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அனேகமாக இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்து அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com