மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு ஆதரவாக நடிகை கங்கனா போஸ்ட்; வறுத்தெடுத்த நடிகர் சித்தார்த்!

மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு ஆதரவாக நடிகை கங்கனா போஸ்ட்; வறுத்தெடுத்த நடிகர் சித்தார்த்!

மகாத்மா காந்தியைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த வலதுசாரியான நாதுராம் கோட்சேவுக்கு ஆதரவாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ட்விட்டரில் போஸ்ட் போட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.

தன் திறமைக்காகவிட, சர்ச்சைக்காக பெயர் எடுத்தவர் கங்கனா. வலதுசாரி சிந்தனையில் அதிக நாட்டமுடைய கங்கனா, தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து சொல்லி வருபவர். அதேபோல பாஜகவும் அவருக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுக்கும்.

இந்நிலையில் கங்கனா, காந்தியின் நினைவு தினமான நேற்று கோட்சேவின் புகைப்படங்களைப் பகிர்ந்து, 'ஒவ்வொரு கதைக்கும் மூன்று பக்கங்கள் இருக்கும். என்னுடைய பக்கம், உங்களுடைய பக்கம் மற்றும் உண்மையின் பக்கம். ஒரு நல்ல கதை சொல்லி, ஒரு கதையை முழுமையாக சொல்லவோ, உண்மையைப் போட்டுடைக்கவோ மாட்டார். அதனால் தான் நம் பாடப் புத்தகங்களில் சுவாரஸ்யமே இருக்காது. எப்போதும் வெளிப்படையாக சொல்லி கெடுத்துவிடும்' என்று ஏதேதோ உளறிக் கொட்டியுள்ளார். அவர் கோட்சேவுக்கு ஆதரவாகத்தான் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார் என்பது தெரிகிறது.

இதற்கு நடிகர் சித்தார்த், 'இந்த ஆள், ஏன் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லாமல் மென்று முழுங்கி வருகிறார்?' என நக்கல் கலந்த தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார். சித்தார்த், பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com