அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் இணையும் ‘ஹாஸ்டல்’ First Look!

அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் இணையும் ‘ஹாஸ்டல்’ First Look!

அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 'ஹாஸ்டல்' என்னும் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். 

இந்தப் படத்தில் நடிகர் சதீஷ் மற்றும் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் தோன்றி புகழடைந்துள்ள யோகியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுமந்த் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். 

அசோக் செல்வன், கடைசியாக 'ஓ மை கடவுளே' படம் மூலம் மிகப் பெரிய ஹிட் கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதில் ஹாஸ்டல் முதலில் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரியா பவானிசங்கர், தமிழ்த் திரையுலகின் மிகவும் பிஸியான ஹீரோயின்களில் ஒருவராக மாறியுள்ளார். அவர் கைவசம் தற்போது 5க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. 

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com