விஷால் புகார் அளித்ததில் இத்தனை பின்னணியா? புதிய தகவல்!

விஷால் புகார் அளித்ததில் இத்தனை பின்னணியா? புதிய தகவல்!

பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மீது நடிகர் விஷால் சென்னை காவல்துறை ஆணையரிடம் நேற்று புகார் அளித்தார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோலிவுட் வட்டாரங்கள் கூறியபோது ’சக்ரா’ என்ற படத்தை விஷால் தயாரிக்கும்போது ரூபாய் மூன்று கோடி ஆர்பி சவுத்ரியிடம் கடன் பெற்று இருந்தார் என்பதும் அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு அந்த பணத்தை திருப்பிக் கொடுத்த விஷால் தான் எழுதிக் கொடுத்த பத்திரங்களை கேட்டபோது அவர் தர மறுப்பதாகவும் இதனை அடுத்து விஷால் புகார் அளித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி விஷால் கொடுத்த பாத்திரங்களை ஆர்பி சவுத்ரி தரப்பினர் தொலைந்து விட்டதாகவும், அதற்கு பதிலாக என்ஓசி எழுதித் தருவதாக ஆர்பி சவுத்ரி விஷாலை சமாதானப்படுத்தியதாகவும் ஆனால் அதற்கு சமாதானமாகாத விஷால் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விஷாலின் புகாருக்கு பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி என்ஓசி பெற்றாலே போதும் என்ற நிலை இருக்கும்போது விஷால் வலுக்கட்டாயமாக புகார் அளித்ததால் வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com