நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்: என்னடா நடக்குது இங்கே…

நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்: என்னடா நடக்குது இங்கே…

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவி நடித்த 'பூமி' ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால் என்பது தெரிந்ததே. மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் கடந்த பொங்கல் தினத்தில் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிதி அகர்வால் தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தமிழில் ஒரே நாளில் நிதி அகர்வால் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனதையடுத்து நிதிஅகர்வாலுக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்,. ரசிகர் மன்றங்கள் மற்றும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பக்கங்கள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த கட்டமாக நடிகை நிதி அகர்வாலுக்கும் அவரது ரசிகர்கள் கோவில் கட்டி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நிதி அகர்வாலின் ரசிகர்கள் சிலர் திரண்டு அவருக்கு கோவில் கட்டி அவரது சிலைக்கு தீபாரதனை காட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகைகளுக்கு கோவில் கட்டுவது என்பது தமிழகத்தைப் பொருத்தவரை புதிதல்ல. ஏற்கனவே குஷ்பு உள்பட ஒரு சிலருக்கு கோயில் கட்டி உள்ளனர் என்ற நிலையில் தற்போது அந்த பட்டியலில் நிதி அகர்வாலுக்கும் ரசிகர்கள் கோவில் கட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து என்னடா நடக்குது இங்கே என நெட்டிசன்கள் கேலியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com