இயக்குநர் திரு இயக்கும் ஆவணப்படத்தில் சிவகார்த்திகேயன்!

இயக்குநர் திரு இயக்கும் ஆவணப்படத்தில் சிவகார்த்திகேயன்!

இயக்குநர் திரு இயக்கத்தில் கல்வி தொடர்பான ஆவணப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சமூக வலைதளங்களில், சிவகார்த்திகேயன் பள்ளி மாணவர்களுக்கு முன் நின்றுகொண்டு பேசுவது போன்ற புகைப்படம் சமீபத்தில் வைரலாக பரவியது. அவருக்கு அருகில் 'சமர்' உள்ளிட்ட படங்களைஇயக்கிய இயக்குநர் திரு நின்று கொண்டிருப்பதுபோல அந்தப் புகைப்படம் இருந்தது.

இந்நிலையில் இது குறித்து இயக்குநர் திரு சமூக வலைதளத்தில் கூறுகையில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நான் படம் பண்ணுவது உண்மை தான் ஆனால் அது நீங்கள் நினைக்கும் அளவிற்கு பெரிய படம் ஒன்றும் இல்லை.நான் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஓர் ஆவணப்படத்தில் பணியாற்றி வருகிறேன்,

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு நல்ல காரியத்திற்காக எடுக்கப்படுகிறது. இது குறித்த விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com