லிவிங் டுகெதருடன் வாழ்ந்தவரை திருமணம் செய்து கொண்ட ‘தர்பார்’ நடிகை!

லிவிங் டுகெதருடன் வாழ்ந்தவரை திருமணம் செய்து கொண்ட ‘தர்பார்’ நடிகை!

கடந்த ஓராண்டுக்கும் மேலாக லிவிங் டுகெதர் உடன் வாழ்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட 'தர்பார்' பட நடிகை குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்த நிலையில் பெண் போலீசாக நடித்து இருந்தவர் ஷமதா அஞ்சான். இவர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த ஓராண்டாக கெளரவ் வர்மா என்பவருடன் ஷமதா அஞ்சான் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் இதனையடுத்து தற்போது இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளதை அடுத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

ஷமதா அஞ்சான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். தர்பாரில் இருந்து திருமணம் வரை என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், ரசிகர்கள் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com