தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த விஷால்!

தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த விஷால்!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியவர்களின் தந்தையுமான ஆர்பி சவுத்ரி மீது முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியிடம் சில லட்சங்கள் விஷால் கடன் வாங்கியதாகவும் கடனுக்கு ஈடாக பத்திரங்கள் உள்ளிட்ட ஒரு சில ஆவணங்களை கொடுத்ததாகவும், இந்த நிலையில் தற்போது கடன் தொகையை திருப்பி கொடுத்த பின்னரும் பத்திரங்கள், ஆவணங்களை தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி திருப்பி தரவில்லை என்றும் சென்னை தி நகர் காவல் துறை துணை ஆணையரிடம் விஷால் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து விசாரணை செய்ய மாம்பலம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மாம்பலம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஜீவா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் ஜீவாவின் தந்தை மீது விஷால் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com