வனிதா விஜயகுமார் மீண்டும் திருமணமா? டுவிட்டரில் விளக்கம்

வனிதா விஜயகுமார் மீண்டும் திருமணமா? டுவிட்டரில் விளக்கம்

நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே 3 முறை திருமணங்கள் செய்ததாக கூறப்படும் நிலையில் தற்போது நான்காவது முறையாக திருமணம் செய்து கொண்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியது. இதனை அடுத்து அவர் இது குறித்து தனது டுவிட்டரில் விளக்கம் அளித்து தான் தற்போது சிங்கிள் என்றும் அவைலபிள் என்றும் பதிவு செய்துள்ளார்.

வனிதா விஜயகுமார் ஏற்கனவே ஆகாஷ் என்பவரை முதலில் திருமணம் செய்து ஒரு மகன் மற்றும் ஒரு மகளை பெற்றார். அதன்பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா, ஆனந்தராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை வனிதா காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே பீட்டர் பாலை தான் பிரிந்துவிட்டதாக வனிதா விஜயகுமார் தெரிவித்ததை அடுத்து இந்த திருமணமும் முறிந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நான்காவதாக பைலட் ஒருவரை வனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கொல்கத்தாவில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் நடந்ததாகவும் சமூக ஊடகங்களில் மிக வேகமாக வதந்தி ஒன்று பரவி வருகிறது. இந்த வதந்திக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது டுவிட்டரில் பதிவு செய்த வனிதா விஜயகுமார், தான் தற்போது சிங்கிள் என்றும் அவைலபிள் என்றும் தயவுசெய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டும் என்றும், யாரும் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். வனிதாவின் டுவிட்டில் உள்ள அவைலபிள் என்ற வார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com