தேன்மொழி சீரியல் நடிகர் திடீர் மறைவு: அதிர்ச்சியில் ஜாக்குலின்

தேன்மொழி சீரியல் நடிகர் திடீர் மறைவு: அதிர்ச்சியில் ஜாக்குலின்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி சீரியல் நாயகி ஜாக்குலினுக்கு தந்தையாக நடித்த குட்டி ரமேஷ் என்பவர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக காலமாகிவிட்டது ஜாக்குலின் உள்பட அந்த சீரியலின் குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக சின்னத்திரை மற்றும் பெரிய திரை பிரபலங்கள் வரிசையாக கொரோனா தொற்று உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்து வருவது அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல சீரியல்களில் நடித்தவரும் ஒரு சில திரைப் படங்களில் நடித்தவருமான குட்டி ரமேஷ் திடீரென காலமானார்.

அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு இருந்ததாகவும் சிகிச்சையின் பலன் இன்றி காலமாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குட்டி ரமேஷ் அவர்களின் மறைவுக்கு ஜாக்குலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மை டியர் அப்பா, உங்கள் மறைவு கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நீங்கள் எங்களுக்கு மிகச் சிறந்த அப்பாவாக இருந்தீர்கள். நாங்கள் உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com