விஷால் உள்பட பிரபல நடிகர்களின் பி.ஆர்.ஓ திடீர் மறைவு: அதிர்ச்சியில் திரையுலகம்

விஷால் உள்பட பிரபல நடிகர்களின் பி.ஆர்.ஓ திடீர் மறைவு: அதிர்ச்சியில் திரையுலகம்

நடிகர் விஷால் உள்பட பிரபல நடிகர்களின் பிஆர்ஓ வாக இருந்த பிஏ ராஜு அவர்கள் திடீரென காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே திரையுலகைச் சேர்ந்தவர்களும் திரையுலகை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர்களும் கொரோனா உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களின் பிஆர்ஓ வாக இருந்த பிஏ ராஜு அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறப்பட்டு வருகிறது.

மகேஷ்பாபு, விஷால், அல்லு அர்ஜுன் உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு அவர் பிஆர்.ஓவாக அவர் இருந்து வந்தார் என்பதும் அவர்களின் படங்களை புரோமோஷன் செய்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பிஏ ராஜு அவர்கள் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர் என்பதும் சினிமா சம்பந்தமான இணையதளம் ஒன்றை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிஏ ராஜு அவர்களின் மறைவிற்கு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரமுகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்துக் கொண்டு வருவதோடு, அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து உள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறும் என தெரிகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com