250 ரசிகர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்திய நடிகர் சூர்யா!

250 ரசிகர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்திய நடிகர் சூர்யா!

பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய ரசிகர்கள் 250 பேர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தி உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தனது ரசிகர்கள் சிலர் ஊரடங்கு நேரத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அத்தியாவசிய தேவைகளான உணவுக்கு கூட பணம் இல்லாமல் தவிப்பதாகவும் தகவல் வந்ததையடுத்து இதுகுறித்து ரசிகர்களின் வங்கி கணக்கை பெற்ற சூர்யா, 250 ஏழை-எளிய ரசிகர்களின் வங்கி கணக்கில் தலா ரூபாய் 5000 செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பணம் அந்த ஏழ்மை நிலை உள்ள ரசிகர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சூர்யா சத்தமில்லாமல் செய்த இந்த உதவி தற்போது தான் தெரிய வந்துள்ளது என்பதும் இதனை அடுத்து சூர்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மற்ற நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் ஏழ்மை நிலையில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. சூர்யாவை அடுத்து விஜய், அஜித் ஆகிய மாஸ் நடிகர்களும் இதேபோன்று ரசிகர்களுக்கு உதவி செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com